செப்டம்பர் 1 முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க அனுமதி? -மத்திய அரசு ஆலோசனை

வெள்ளிக்கிழமை, 7 ஆகஸ்ட் 2020      இந்தியா
central government 2020 08 03

Source: provided

புது டெல்லி : செப்டம்பர் 1 முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க அனுமதிக்க மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளது. மாநிலங்களில் உள்ள கொரோனா நிலவரத்தை கருத்தில் கொண்டு அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 1-ல் தொடங்கி நவம்பர் 14 வரை படிப்படியாக பள்ளிகளை திறக்க அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஆகஸ்ட் இறுதியில் மத்திய அரசு வெளியிடும். 

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புக்காக கடந்த மார்ச் மாதம் முதலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.  இந்நிலையில் தேர்வுகள் நடைபெறாததால் பல மாநிலங்கள் பள்ளி மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்கியுள்ளன.

இதனை தொடர்ந்து பள்ளிகள் எப்போது திறக்கபடும் என்பது தெரியாத நிலையில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி செப்டம்பர் மாதத்தின் முதல் 15 நாட்களுக்குள்ளாக 10,11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செப்டம்பர் 15-க்கு பிறகு 6 முதல் 9 வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடங்க வாய்ப்புள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் ஆகஸ்டு இறுதியில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. 

மேலும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு அந்தந்த மாநிலங்களே பள்ளி திறப்பது குறித்தும் முடிவு செய்யலாம் எனவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மழலையர் மற்றும் தொடக்க பள்ளிகளை திறப்பது பற்றி ஆலோசிக்கப்படவில்லை.

ஒவ்வொரு மாணவருக்கும் இடையே 6 அடி இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்படும். வகுப்புகளை 2 ஷிப்டு முறையிலும் நடத்த பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து