முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனடாவுக்கு கூலிப்படையை அனுப்பியதாக சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மீது குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 7 ஆகஸ்ட் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

டொரான்டோ : சவுதி முன்னாள் உளவுத்துறை அதிகாரியைக் கொல்ல கனடாவுக்கு கூலிப்படையை அனுப்பியதாக சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமதுபின் சல்மான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புகார் மனு ஒன்றில் சவுதி பட்டத்து இளவரசர் சவுதி முன்னாள் உளவுத்துறை அதிகாரியான சாத் அல்-ஜாப்ரியை கொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

துருக்கியில் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை செய்யப்பட்ட உடனேயே ஜாப்ரியை கொல்ல திட்டமிடப்பட்டதாகவும், எனினும் அந்த திட்டம் தோல்வியில் முடிந்ததாக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சவுதி அரேபியா அரசாங்கத்தின் மூத்த அதிகாரியான ஜாப்ரி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நாடுகடத்தப்பட்டார். அவர் அன்று முதல் கனடாவின் டொரான்டோவில் தனியார் பாதுகாப்பில் இருக்கிறார்.

டொரொன்டோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து கூலிப்படையினர் நாட்டிற்குள் நுழைய முயன்ற போது கனாடா எல்லைப் படையினருக்கு சந்தேகம் எழுந்ததையடுத்து, ஜாப்ரியை கொல்லும் சதி திட்டம் முறியடிக்கப்பட்டது என்று நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.

61 வயதான ஜாப்ரி, பல ஆண்டுகளாக இங்கிலாந்தின் எம்.ஐ.6 மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள பிற மேற்கத்திய உளவு நிறுவனங்களுக்கான முக்கிய அங்கமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊழல் குற்றச்சாட்டு மற்றும் புலி படை என்று பெயரிடப்பட்ட தனிப்பட்ட கூலிப்படையினரின் குழுவை மேற்பார்வையிடுவது போன்ற சவுதி சம்பந்தமான முக்கிய தகவல்கள் தனக்கு தெரியும் என்பதால் தன்னை கொல்ல முயற்சிப்பதாக ஜாப்ரி கூறியுள்ளார்.

2018-ல் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி துணைத் தூதரகத்திற்குள் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கசோகி கொலையில் புலி படைக்கு தொடர்பு இருந்ததாக நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து