நடிகர் சஞ்சய்தத் விரைவில் குணமடைய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் வாழ்த்து

புதன்கிழமை, 12 ஆகஸ்ட் 2020      விளையாட்டு
Yuvraj Singh 2020 07 29

Source: provided

மும்பை : சஞ்சய் தத் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ள நிலையில், அது ஏற்படுத்தும் வலியை நான் அறிவேன், விரைவில் குணமடைய யுவராஜ் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். அதன்பின் வீடு திரும்பினார். 

வீடு திரும்பிய 61 வயதாகும் சஞ்சய் தத், மருத்துவ சிகிச்சை பெற இருப்பதால் இடைவெளி எடுத்துக் கொள்ள இருக்கிறேன் என்ற டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

சஞ்சய் தத் தனது டுவிட்டர் பக்கத்தில், மெடிக்கல் சிகிச்சை பெற இருப்பதால் வேலையில் இருந்து சற்று ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

சஞ்சய் தத் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், நீங்கள் எப்போதுமே ஒரு போராளி. அது காரணமாக ஏற்படும் வலியை நான் அறிவேன்.

ஆனால், நீங்கள் வலிமையானவர், மேலும், இந்த கடின கட்டத்தை கடப்பதை பார்ப்பேன். நீங்கள் விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறேன். வாழ்த்து தெரிவிக்கிறேன் என தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

2012-ம் ஆண்டு நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட யுவராஜ்சிங் அதில் இருந்து வெற்றிகரமாக மீண்டு 2013-ல் இருந்து 2019 வரை சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பித்தக்கது

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து