Idhayam Matrimony

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திண்டுக்கல் பயணம்

செவ்வாய்க்கிழமை, 6 ஜனவரி 2026      தமிழகம்
Stalin 2021 11 29

திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று (புதன்கிழமை) காலை, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். மேலும் பல்வேறு துறைகளின் சார்பில் 30 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர்  வழங்குகிறார்.

அதோடு ஒரு லட்சத்து 2 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்குகிறார். மேலும் ரூ.1,500 கோடி மதிப்பிலான திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார். இதில் ரூ.75 கோடியில் கட்டப்பட்டுள்ள கூட்டுறவு கலைக்கல்லூரி, ரூ.15 கோடியில் கட்டப்பட்ட அரசு கலைக்கல்லூரி, குடிநீர் திட்டம் உள்ளிட்டவற்றை இடம்பெறுகின்றன. இதுதவிர மாவட்டத்துக்கு புதிய திட்டங்களையும் முதல்வர்  அறிவிக்க இருக்கிறார்.

இந்த விழாவுக்காக கலெக்டர் அலுவலக வளாகத்தில் பிரமாண்ட பந்தல், மேடை அமைக்கும் பணி முழுவீச்சில் நடக்கிறது. அரசு விழாவில் பங்கேற்பதற்கு, முதல்வர்  மு.க.ஸ்டாலின் இன்று காலை மதுரையில் இருந்து கார் மூலம் திண்டுக்கல்லுக்கு வருகிறார். இதையொட்டி முதல்வர்  மு.க.ஸ்டாலினை வரவேற்க தி.மு.க. சார்பில் பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

அதன்படி திண்டுக்கல்-மதுரை சாலையில் பாண்டியராஜபுரம், கொடைரோடு சுங்கச்சாவடி, பெருமாள்கோவில்பட்டி, சின்னாளப்பட்டி, தோமையார்புரம், கலெக்டர் அலுவலகம் அருகில் அஞ்சலி ரவுண்டானா ஆகிய 6 இடங்களில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அப்போது முதல்வர்  தி.மு.க. வினர் மற்றும் பொதுமக்களின் வரவேற்பை ஏற்று கொள்ள இருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து