முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாவட்டங்களுக்கான கடன் விவகாரம்: ரிசர்வ் வங்கியின் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்: பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்

செவ்வாய்க்கிழமை, 8 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். முன்னுரிமை கடன் பிரிவில் புதிய திருத்தங்களை ரிசர்வ் வங்கி கடந்த 4-ம் தேதி வெளியிட்டது. இதில், ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ரூ. 50 கோடி வரை வங்கிகள் கடனுதவி வழங்கலாம்.

இதுபோல் பாசனத்துக்கான பம்ப் செட்டுகளுக்கு மின் உற்பத்திக்கான சோலார் மின் உற்பத்தி ஆலை அமைத்தல் மற்றும் பயோ காஸ் ஆலை நிறுவ கடன் வழங்குவதும் முன்னுரிமை கடன் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன.

சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு கடன் வழங்கும் இலக்கு படிப்படியாக அதிகரிக்கப்படும். ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட விலையில் வேளாண் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தும் நிறுவனங்களின் வேளாண் பணிகளுக்கு கடன் வழங்குதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான கடன், சுகாதார உள்கட்டமைப்பு அமைப்பதற்கான கடன் வரம்புகள் இரட்டிப்பு ஆகியவை ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில், ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையின் சில சரத்துகள் பாரபட்சமாக உள்ளதாகவும், சுற்றறிக்கையை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மாவட்டங்களுக்கான கடன் விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் கொள்கை முற்றிலும் தவறானது. அதிகளவில் கடன் ஏற்கனவே பெற்றிருந்தாலும், உரிய நேரத்தில் திருப்பி செலுத்திய தமிழகத்தை ஆர்.பி.ஐ. குறைத்து மதிப்பீடுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களுக்கு கடன் அளிப்பதை குறைத்து கொள்ளும் ரிசர்வ் வங்கியின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பழைய நடைமுறையே தொடர வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் எடப்பாடி வலியுறுத்தியுள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து