அமெரிக்க ஓபன் டென்னிஸ்; அஸ்ரென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் நவோமி ஒசாகா

ஞாயிற்றுக்கிழமை, 13 செப்டம்பர் 2020      விளையாட்டு
Nauomi 2020 09 13

Source: provided

நியூயார்க் : அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் நவோமி ஒசாக சாம்பியன் பட்டம் வென்றார். 

கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில்  பெண்கள் ஒற்றையர் பிரிவு  ஆட்டத்தில்  ஜப்பானின் நவோமி ஒசாகா, பெலாரசை சேர்ந்த அஸ்ரென்காவுடன் மோதினார். 

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில்   1-6, 6-3, 6-3 என அஸ்ரென்காவை வீழ்த்தி நவொமி ஒசாகா சாம்பியன் பட்டம் வென்றார். நவோமி ஒசாகா வெல்லும் 3-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து