கொரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலி : இங்கிலாந்தில் 6 பேர் மட்டுமே ஒன்றாக கூட அரசு அனுமதி

திங்கட்கிழமை, 14 செப்டம்பர் 2020      உலகம்
England 2020 09 14

Source: provided

லண்டன் : இங்கிலாந்தில் இன்று முதல் ஆறு விதி என்று புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வரவுள்ளதால், இதை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். கொரோனா தொற்று அதிகரிப்பதால் இந்த விதிமுறைகள் அமுலுக்கு வருகின்றன.

இங்கிலாந்தில் இன்று முதல் ஆறு விதி என்று புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வரவுள்ளதால், இதை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

இதை மக்கள் சரியாக பின்பற்றாவிட்டால் நாடு மீண்டும் ஒரு கடினமான முழு ஊரடங்கு விதிக்கப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது. இங்கிலாதில் கடந்த சில நாட்களாகவே கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை திடீரென்று அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கூட 3000 - க்கும் மேற்பட்டோர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இப்படியே சென்றால், இது மிகவும் ஆபத்து என்பதால், அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

அதன் படி இன்று முதல் ஆறு முக்கிய விதிகள் நடைமுறைக்கு வரவுள்ளது. அதாவது, திருமணம் மற்றும் இறுதி ஊர்வலத்தின் போது 30 பேருக்கு அனுமதி, பப்புகளில் ஒன்றாக கூட 6 பேருக்கு மட்டுமே அனுமதி,

பார்க்குகளிலும் அதே போன்று 6 பேர் மட்டுமே ஒன்றாக கூட அனுமதி. அதே சமயம் வீடுகளில் 8 பேருக்கு மேல் வெவ்வேறு குடும்பத்தை சேர்ந்தவர்கள் கூடக் கூடாது,

பொதுவெளியில் வெகுஜன் மக்கள் கூடக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இந்த 6 விதிகளில் பெரிய குடும்பங்களுக்கு ஒரு சில விலக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதைப் பற்றி இன்னும் முழு விபரம் வெளியாகவில்லை.

வேலைகளின் போது 6 - க்கும் மேற்பட்டோர், பள்ளிகளில் கல்வி நோக்கங்களுக்காக 6 - க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்படுவர். அதே போன்று வழிபாட்டு தலங்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் வீட்டின் உள்ளே மற்றும் வெளியே சந்திக்க அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இங்கிலாந்து முழுவதிலும் மாறுபடும். 

ஸ்காட்லாந்தில் மூன்று வெவ்வேறு வீடுகளில் இருந்து எட்டு பேர் வரை கூடலாம். வடக்கு அயர்லாந்தில் இரண்டு வீடுகளைச் சேர்ந்த ஆறு பேர் வரை என்று கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிகள் இன்று முதல் தனியார் வீடுகள், பூங்காக்கள், விடுதிகள் மற்றும் உணவகங்களில் கூடிய கூட்டங்களுக்கு அமலுக்கு வரும். இந்த விதிகள் குறைந்தது மூன்று மாதங்களாவது இருக்கும் என்று நம்ப்பப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து