கடந்த 6 மாதங்களில் இந்தியா - சீனா எல்லையில் ஊடுருவல் எதுவும் இல்லை : மாநிலங்களவையில் மத்திய இணை அமைச்சர் பதில்

புதன்கிழமை, 16 செப்டம்பர் 2020      இந்தியா
Nityanand-Roy 2020 09 16

Source: provided

புதுடெல்லி : கடந்த ஆறு மாதங்களில் இந்தியா-சீனா எல்லையில் ஊடுருவல் எதுவும் இல்லை என்று மாநிலங்களவையில் உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் பதில் அளித்து உள்ளார்.

கடந்த ஆறு மாதங்களில் பாகிஸ்தான் மற்றும் சீனாவிலிருந்து ஊடுருவல் வழக்குகள் அதிகரித்துள்ளன என்பது உண்மையா என்ற கேள்விக்கு மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வ  அளித்துள்ள பதிலில் உள்துறை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறி இருப்பதாவது:- 

பிப்ரவரி மற்றும் ஜூன் மாதங்களில் ஊடுருவல்  சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்றாலும், நான்கு பேர் மார்ச் மாதத்தில், ஏப்ரல் மாதம் 24, மே மாதம் 8 மற்றும் ஜூலை மாதம் 11 பேர் ஊடுருவி தோல்வி அடைந்து உள்ளனர். கடந்த ஆறு மாதங்களில் இந்தியா-சீனா எல்லையில் ஊடுருவல் எதுவும் ஏற்படவில்லை என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து