காட்டுத் தீயால் 3 மாகாணங்கள் பாதிப்பு: கலிபோர்னியாவில் கமலா ஹாரிஸ் ஆய்வு

புதன்கிழமை, 16 செப்டம்பர் 2020      உலகம்
Kamala-Harris 2020 09 16

Source: provided

கலிபோர்னியா : காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், கமலா ஹாரிஸ் ஆய்வு மேற்கொண்டார்.

காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார். 

ஆகஸ்ட் மத்தியில் தொடங்கிய இந்த காட்டுத் தீயில் சிக்கி கலிபோர்னியாவில் 25 பேரும், வாஷிங்டனில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இதுவரை 3 மாகாணங்களில் ஆறாயிரத்து 200 வீடுகள் மற்றும் நிறுவனங்கள் தீயில் முற்றிலும் சேதம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் காட்டுத் தீயின் வீரியம் குறித்து அறியாத அதிபர் பதவியில் உள்ளதாக டிரம்பை, ஜோபிடன் கடுமையாக சாடியிருந்த நிலையில், அதிபர் டிரம்பை விமர்சிப்பது மக்களை பிரிக்கும் செயலோ, தத்துவமோ அல்ல என்றும், நாம் அனைவரும் இணைந்து இதற்கு தீர்வுக்காண முன்வர வேண்டும் என கமலா ஹாரிஸ் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து