70 ஆண்டுகளாக சந்தித்த அநீதியில் இருந்து விவசாயிகளை பிரதமர் விடுவித்துள்ளார் : பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா கருத்து

ஞாயிற்றுக்கிழமை, 20 செப்டம்பர் 2020      இந்தியா
J P Natta 2020 09 20

Source: provided

புதுடெல்லி : விவசாயிகள் 70 ஆண்டுகளாக சந்தித்து வந்த அநீதியில் இருந்து அவர்களை பிரதமர் மோடி விடுவித்துள்ளார் என பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கூறியுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா,

அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் 2 வேளாண் மசோதாக்கள் நேற்று மாநிலங்களவையிலும்  நிறைவேற்றப்பட்டன.  

இதன்பின்னர் வேளாண் மசோதா நிறைவேற்றம் பற்றி பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கூறும் பொழுது, கடந்த 70 ஆண்டுகளாக விவசாயிகள் சந்தித்து வந்த அநீதியில் இருந்து அவர்களை பிரதமர் மோடி தலைமையிலான அரசு விடுவித்துள்ளது. 

எதிர்க்கட்சிகள் அனைத்தும் விவசாயிகளுக்கு எதிரானது.  வேளாண் மசோதா நடைமுறைப்படுத்தும் அரசின் முயற்சியில் அவர்கள் ஒரு பகுதியாக இருப்பதற்கு பதிலாக, விவசாயிகளின் சுதந்திரத்தினை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.  அவர்களது இந்த செயலை பா.ஜ.க. கண்டிக்கிறது என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து