கொரோனாவுக்கு மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்காடி பலி

புதன்கிழமை, 23 செப்டம்பர் 2020      இந்தியா
Suresh 2020 09 23

Source: provided

புதுடெல்லி : கொரோனா நோய்க்கு மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி பலியானார். 

கொரோனா தொற்று உலகம் முழுவதும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாமல் இந்த நோய்க்கு பலர் பலியாகி விட்டனர். சமீபத்தில் குமரி தொகுதி எம்.பி.  வசந்தகுமார் பலியானது நினைவிருக்கலாம்.

தற்போது இந்த நோய்க்கு மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடியும் பலியாகி உள்ளார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுரேஷ் அங்காடி சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பலியானார்.

இவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். நான்கு முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கொரோனாவுக்கு பலியான முதல் மத்திய அமைச்சர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து