நடுவரை விமர்சித்து சாக்ஷி டோனி டுவீட்

புதன்கிழமை, 23 செப்டம்பர் 2020      விளையாட்டு
Sakshi-Dhoni 2020 09 23

Source: provided

புதுடெல்லி : டாம் கர்ரனுக்கு அவுட் கொடுத்துவிட்டு, பின் அந்த முடிவை திரும்ப பெற்றதால் எம்.எஸ்.டோனி மனைவி சாக்ஷி நடுவரை விமர்சனம் செய்துள்ளார். 

ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்தபோது தீபக் சாஹர் வீசிய 18 - வது ஓவரின் 5 - வது பந்தில் டாம் கர்ரனின் பேட்டை பந்து உரசி சென்றது போல் இருந்தது.

அதை கேட்ச் பிடித்த டோனி அப்பீல் செய்தார். நடுவரும் உடனடியாக அவுட் கொடுத்துவிட்டார். ஆனாலும் அவர் டி.ஆர்.எஸ்.க்கு அப்பீல் செய்தார். ராஜஸ்தான் ஏற்கனவே அதற்கான வாய்ப்பை இழந்து விட்டதால் டாம் கர்ரன் பெவிலியனுக்கு திரும்ப வேண்டியது உறுதியானது.

டி.ஆர்.எஸ். முறையில் அவருக்கு அவுட் கொடுக்கப்படவில்லை. இது தொடர்பாக டோனி நடுவருடன் விவாதித்தார். இதுதொடர்பாக டோனியின் மனைவி சாக்ஷி நடுவரை டுவிட்டரில் விமர்சித்து இருந்தார்.

அவுட் என்றால் அவுட் கொடுங்கள். நீங்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்த விரும்பினால் அதை சரியாக செய்யுங்கள் என்று டுவிட்டரில் கூறி இருந்தார். ஆனால் அடுத்த சில விநாடிகளில் அந்த டுவிட்டை சாக்ஷி டோனி நீக்கிவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து