கோவா சர்வதேச திரைப்பட விழா ஜனவரிக்கு ஒத்திவைப்பு

வியாழக்கிழமை, 24 செப்டம்பர் 2020      சினிமா
film 2020 09 24

கோவா சர்வதேச திரைப்பட விழா ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவாவில் வரும் நவம்பர் மாதம் 20-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை சர்வதேச திரைப்பட விழா நடத்த திட்டமிடப்பட்டது. உரிய விதிமுறைகளை பின்பற்றி திரைப்பட விழா நடத்தப்படும் என கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியிருந்தார். ஆனால் கொரோனா பரவி வரும் இந்த காலகட்டத்தில் திரைப்பட விழாவை திட்டமிட்டபடி நடத்துவதில் சிக்கல் எழுந்தது.  இந்த விவகாரம் குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம், கொரோனா சூழலை ஆய்வு செய்த பிறகே, நவம்பரில் திரைப்பட விழா நடத்துவது பற்றி முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தது. 

இந்நிலையில், சர்வதேச கோவா திரைப்பட விழா ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் உடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து