மேலும் 5,692 பேருக்கு கொரோனா: தமிழக சுகாதாரத்துறை தகவல்

வியாழக்கிழமை, 24 செப்டம்பர் 2020      தமிழகம்
corona-virus

தமிழகத்தில் மேலும் 5,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,63,691-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  

இது குறித்து சுகாதார துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 

 தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 5,08,210 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 5,470 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் நேற்று 66 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 9,076-ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 66,08,675 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 88,784 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் மொத்தம் 68,15,644 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 90,607 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் மொத்தம் 178 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 46,405 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,40,015 பேர் ஆண்கள், நேற்று  மட்டும் 3,546 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.   தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 2,23,646 பேர் பெண்கள், நேற்று மட்டும் 2,146 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை மொத்தம் 30 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.  சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,089 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 1,59,683 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 12 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து வந்த ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு சுகாதார துறை தெரிவித்துள்ளது.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து