என் பெயரை எப்படி இழுக்கலாம்? -கவாஸ்கருக்கு அனுஷ்கா சர்மா கேள்வி

வெள்ளிக்கிழமை, 25 செப்டம்பர் 2020      விளையாட்டு
Anushka-Sharma 2020 09 25

Source: provided

மும்பை : லாக்டவுன் காலத்தில் விராட் கோலி அனுஷ்கா சர்மாவின் பந்து வீச்சை மட்டுமே எதிர்கொண்டார் என கவாஸ்கர் கூற, அனுஷ்கா சர்மா கோபத்தில் கேள்விகளை அடுக்கியுள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் விராட் கோலியின் ஆட்டம் மிகவும் மோசமாக இருந்தது. இரண்டு கேட்ச்களை தவறவிட்ட விராட் கோலி, ஒரு ரன் எடுத்து ஏமாற்றம் அடைந்தார். 

போட்டி நடைபெற்று கொண்டிருக்கும்போது வர்ணனையாளராக செயல்பட்டு சுனில் கவாஸ்கர் விராட் கோலியை விமர்சிக்கும் வகையில் லாக்டவுன் காலத்தில் விராட் கோலி அவருடைய மனைவியின் பந்து வீச்சை மட்டுமே எதிர்கொண்டார் எனக் கூறினார்.

அனுஷ்கா சர்மா எப்போதுமே விராட் கோலி விளையாட்டையும், தன்னையும் தொடர்புபடுத்தி யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம் எனத் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் சுனில் கவாஸ்கரிடம் விளக்கம் கேட்டுள்ளார். 

இதுகுறித்து அனுஷ்கா சர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில், மிஸ்டர் கவாஸ்கர், உங்களுடைய தகவல் வெறுக்கத்தக்கது. அது உண்மை. ஆனால், ஒருவடைய கணவரின் ஆட்டத்திற்கு அவருடைய மனைவியை குற்றம் கூறியது ஏன்? என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்பதை நான் விரும்புகிறேன். 

நீங்கள் போட்டியின்போது வர்ணனை செய்யும்போது ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மரியாதை கொடுப்பீர்கள் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அவர்களுக்கு இணையாக எனக்கு மற்றும் எங்களுக்கு நீங்கள் கொடுக்க வேண்டும் என்று தோன்றவில்லையா? உள்பட பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து