அமீரகத்துக்கு 9 பேட்டுகள் கொண்டு சென்ற ரோகித் சர்மா

ஞாயிற்றுக்கிழமை, 27 செப்டம்பர் 2020      விளையாட்டு
Rohit-Sharma 2020 09 27

Source: provided

துபாய் : அமீரகத்துக்கு 9 பேட்டுகள் கொண்டு சென்றுள்ளார் ரோகித் சர்மா. 

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா அளித்த ஒரு பேட்டியில், ‘20 ஓவர் கிரிக்கெட்டில் விளையாடும் போது பேட்டிங்கில் அதிகமான அதிரடி காட்ட வேண்டியது அவசியமாகும்.

இதே போல் புதுமையான ஷாட்டுகளை அடிப்பதற்கு நிறைய பயிற்சியும் தேவை. இதனால் பேட் சீக்கிரமாகவே உடைந்து விடுவதற்கு வாய்ப்பு உண்டு. ஐ.பி.எல். மற்றும் 20 ஓவர் போட்டிகளின் போது எனது பேட் ஒன்று அல்லது 2 மாதங்கள் தாக்குப்பிடிக்கும்.

ஆனால் தற்போதைய கடினமான காலக்கட்டத்தில் கொரியர் சேவை எந்த அளவுக்கு இருக்கிறது என்பது தெரியவில்லை. அதனால் முன்னெச்சரிக்கையாக அமீரகம் புறப்பட்ட போது, கிட்டத்தட்ட 9 பேட்டுகளை உடன் எடுத்து வந்தேன்  என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து