Idhayam Matrimony

5 ஆண்டுக்கு பிறகு மீண்டும் இந்தியா- சீனா விமான சேவை தொடக்கம்

திங்கட்கிழமை, 27 அக்டோபர் 2025      இந்தியா
Air

Source: provided

கொல்கத்தா : 5 ஆண்டுக்கு பிறகு மீண்டும் இந்தியா- சீனா விமான சேவை தொடங்கியது.

கொரோனா பரவல் எதிரொலியாக கடந்த 2020-ம் ஆண்டு இந்தியா-சீனா இடையேயான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டது. அதன்பின், லடாக் எல்லைப் பிரச்சனை காரணமாக நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்குவதில் சிக்கல் எழுந்தது. இதற்கிடையே, அமெரிக்கா உடனான பனிப்போருக்கு மத்தியில் இந்தியா-சீனா உறவில் முன்னேற்றம் ஏற்பட்டது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்துப் பேசியது இதற்கு அடித்தளமாக அமைந்தது. இதையடுத்து, இந்தியா - சீனா இடையேயான நேரடி விமான சேவை விரைவில் தொடங்கும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது. இந்நிலையில், கொல்கத்தா-குவாங்சூ இடையிலான இண்டிகோ விமான சேவை நேற்று முன்தினம் தொடங்கியது. ஷாங்காய்-டெல்லி இடையேயான விமான சேவை நவம்பர் 9-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து