எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திருச்செந்தூர் : கந்தசஷ்டி சூரசம்ஹார விழாவையொட்டி நெல்லை மற்றும் தாம்பரத்தில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடைபெறவுள்ள நிலையில், தரிசனத்துக்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காக, மதுரை கோட்ட ரயில்வே சார்பில் நெல்லை–திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அதன்படி, இந்த சிறப்பு ரயில் (வ.எண்.06106) திருச்செந்தூரில் இருந்து இன்று (திங்கட்கிழமை) இரவு 9 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.30 மணிக்கு நெல்லை ரயில் நிலையம் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், இந்த ரயில் (வ.எண்.06105) நெல்லையில் இருந்து நேற்று நள்ளிரவு 11 மணிக்கு புறப்பட்டு, நள்ளிரவு 12.30 மணிக்கு திருச்செந்தூர் ரயில் நிலையம் சென்றடைகிறது.இந்த ரயில்கள் ஆறுமுகநேரி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும் ரயில் மட்டும் பாளையங்கோட்டை ரயில் நிலையத்திலும் நின்று செல்லும். ரெயிலில் 10 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
அதேபோல், தாம்பரத்தில் இருந்து ஒரு சிறப்பு கட்டண ரயில் (வ.எண்.06135) நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9.35 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.40 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தடைகிறது. காலை 8 மணிக்கு நெல்லை ரயில் நிலையம் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், இந்த சிறப்பு கட்டண ரயில் (வ.எண்.06136) திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, நள்ளிரவு 11.45 மணிக்கு நெல்லை ரயில் நிலையத்தையும், நள்ளிரவு 2.10 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தையும் சென்றடைகிறது. மறுநாள் காலை 10.30 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையம் சென்றடைகிறது.
இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை ஆகிய ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும். திருச்செந்தூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் ஆறுமுகநேரி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். ரெயிலில் ஒரு குளிரூட்டப்பட்ட இருக்கை வசதி பெட்டி, 11 இரண்டாம் வகுப்பு உட்காரும் பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள் மற்றும் 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


