நாட்டை சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார் பிரதமர் மோடி - குஷ்பு பேட்டி

திங்கட்கிழமை, 12 அக்டோபர் 2020      அரசியல்
Khushbu 2020 10 12

நாட்டை சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார் பிரதமர் மோடி – என்று குஷ்பு தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக நேற்று காலை கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு குஷ்பு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குஷ்பு டெல்லியில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, தமிழக தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் குஷ்பு கூறியதாவது:

தமிழக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற சிறப்பாக பாடுபடுவேன். மேலும் பிரதமர் மோடி மாதிரியான ஒரு தலைவரால்தான் நாடு முன்னேற முடியும்.  நாட்டை சரியான பாதையில் பிரதமர் மோடி எடுத்துச் செல்கிறார்.

பிரதமர்மோடி போன்ற தலைமை நாட்டிற்கு தேவை என்பதை உணர்ந்து பாஜகவில் இணைந்துள்ளேன்.  பிரதமர் மோடி மற்றும் பாஜக மீது கோடிக்கணக்கான  மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க கடுமையாக உழைப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ.க.வில் இணைந்தது ஏன்?

பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த பின்னர் குஷ்பு கூறியதாவது:

காங்கிரசில் இருந்தபோது பல விவகாரங்களில் பா.ஜ.க.வை ஆதரித்துள்ளேன். நாட்டிற்கு எது நல்லது என்பது போகப்போக புரிந்தது.

மாற்றம் என்பது மனிதர்களின் இயல்பு. நாட்டிற்கு எது நல்லது என தெரிந்து கொண்டதால் பாஜகவில் இணைந்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து