முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 2000 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டம்

புதன்கிழமை, 14 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 14-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் சனிக்கிழமை பண்டிகை வருவதால் வெள்ளிக்கிழமை அன்று பெரும்பாலானவர்கள் தங்கள் ஊருக்கு பயணம் மேற்கொள்வார்கள்.

சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாட விரும்புபவர்கள் பஸ், ரெயில்களில் முன்பதிவு செய்வார்கள்.

தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக பஸ், ரெயில் போக்குவரத்து முழுமையாக நடைபெறவில்லை. ஒருசில இடங்களுக்கு மட்டும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. அரசு பஸ்கள் 50 சதவீதம் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளது. ஆனால் அரசு சிறப்பு பஸ்கள் பற்றி இதுவரையில் அறிவிக்கவில்லை. வழக்கமாக ஒரு மாதத்துக்கு முன்பே சிறப்பு பஸ்கள் அறிவிக்கப்படும்.

கொரோனா பாதிப்பின் காரணமாக சிறப்பு பஸ்கள் அறிவிப்பு தாமதமாகி வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் மத்தியில் அச்ச உணர்வு இருப்பதால் சிறப்பு பஸ்கள் இயக்கினால் பயன் அளிக்குமா? என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆலோசிக் கிறார்கள். 

கடந்த வருடம் 4000 ஆயிரம் சிறப்பு பஸ்கள் தீபாவளிக்கு இயக்கப்பட்டது. சுமார் 6 லட்சம் பேர் பயணம் செய்தனர்.

இந்த வருடம் கொரோனா பரவல் அச்சம் நிலவுதால் மக்கள் வெளியூர் பயணத்தை மேற்கொள்வார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் சிறப்பு பஸ்களை குறைக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. 

தீபாவளி பண்டிகைக்கு சுமார் 2 ஆயிரம் சிறப்பு பஸ்களை இயக்கலாமா? அதற்கான சாத்திய கூறுகள் உள்ளனவா? என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கொரோனா பாதிப்பு குறித்த பயம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. இந்த நேரத்தில் பண்டிகை நாட்களும் வருவதால் மக்களின் போக்குவரத்து பயன்பாடு எப்படி இருக்கும் என்று கணிக்க இயலாது.

ஆனாலும் தற்போது 50 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் தீபாவளி பண்டிகைக்கு கடந்த ஆண்டை விட 50 சதவீதம் குறைவாக சிறப்பு பஸ்களை இயக்கலாமா? என்பது குறித்து பரிசீலித்து வருகிறோம்.

2000 சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கு வாய்ப்பு உள்ளது. இது பற்றி அனைத்து போக்குவரத்து கழக அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து