கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் தினேஷ் கார்த்திக்

வெள்ளிக்கிழமை, 16 அக்டோபர் 2020      விளையாட்டு
Dinesh-Karthik 2020 10

Source: provided

துபாய் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் இருந்தார். அந்த அணியில் இங்கிலாந்து அணியின் மோர்கன் விளையாடி வருகிறார்.

இங்கிலாந்துக்கு உலக கோப்பையை வாங்கிக் கொடுத்த அவருக்கு அனுபவம் அதிகமாக இருப்பதால் அவரை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் தினேஷ் கார்த்திக் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

அவருக்குப் பதிலாக மோர்கன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. கொல்கத்தா இதுவரை ஏழு போட்டிகளில் விளையாடி நான்கில் வெற்றி பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து