முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா: பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி உலா

சனிக்கிழமை, 17 அக்டோபர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தசரா நவராத்திரி பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாக்களை கோயிலுக்குள் ஏகாந்தமாக நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது.

அதன்படி, கடந்த மாதம் நடைபெற்ற வருடாந்திர பிரம்மோற்சவ விழா ஏகாந்தமாக கோயிலுக்குள் நடைபெற்றது. இந்நிலையில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் தொடங்கியது. வரும் 24-ம் தேதி வரை நடைபெற உள்ள இவ்விழாவையும் ஏகாந்தமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால், வழக்கமாக மாட வீதிகளில் நடைபெறும் வாகன சேவைகள் இப்போது கோயிலுக்குள் உள்ளசம்பங்கி மண்டபத்தில் நடத்தப்படுகிறது.  நவராத்திரி பிரம்மோற்சவத்தையொட்டி, கடந்த வியாழக்கிழமை ஏழுமலையான் கோயிலில் ஆகமசாஸ்திரங்களின்படி அங்குரார்பன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இதில், சுவாமியின் சேனாதிபதியான விஸ்வகேசவர் எழுந்தருளி பிரம்மோற்சவ ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு பெரிய சேஷ வாகனத்தில் உற்சவர்களான தேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் எழுந்தருளினார். கோயில் முழுவதும் பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தன. 

கோயிலின் ராஜகோபுரம் முற்றிலும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. ரூ.300 சிறப்பு ஆன்லைன் தரிசனம், விஐபி பிரேக் தரிசனம், ஆன்லைனில் கல்யாண உற்சவம்டிக்கெட் பெற்ற பக்தர்கள், வாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கிய பக்தர்களுக்கு மட்டும் சுவாமியை தரிசிக்க அனுமதி வழங்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து