முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி

சனிக்கிழமை, 17 அக்டோபர் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

அபுதாபி : 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

துபாயில் நடைபெற்ற  ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் போட்டியின்  32 வது ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி  மோதின. அபுதாபி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இப்போட்டியில்,   டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. 

கொல்கத்தா அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்களை சேர்த்தது. கொல்கத்தா அணியில் பேட் கம்மின்ஸ் அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 53 ரன்கள் அடித்தார்.  இதையடுத்து, 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது. 

துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தா அணியை எளிதில் வீழ்த்தியது. 16.5 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்து வெற்றியை ருசித்தது. மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகபட்சமாக குயிண்டன் டி காக் ஆட்டமிழக்காமல் 73 ரன்கள் குவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து