டி.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் புதிய பாலம் உள்ளிட்ட ரூ.45லட்சம் மதிப்பிலான வளர்ச்சித்திட்ட பணிகள்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திறந்து வைத்தார்

திங்கட்கிழமை, 19 அக்டோபர் 2020      தமிழகம்
RBU 2020 10 19

Source: provided

திருமங்கலம் : மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட சோலைப்பட்டி, டி.கல்லுப்பட்டி, பாப்பையாபுரம், சிலமலைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடும் வகையில் புதிய பாலம், அங்கன்வாடிமையம்பயணியர் நிழற்குடை உள்ளிட்ட ரூ.45லட்சம் மதிப்பிலான நிறைவுற்ற வளர்ச்சித்திட்ட பணிகளை தமிழக வருவாய்,பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திறந்து வைத்தார்.

திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட டி.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழக வருவாய்,பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மேற்கொண்ட முயற்சியின் பலனாக அரசின் சார்பில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக டி.கல்லுப்பட்டி ஒன்றியத்திலுள்ள சோலைப்பட்டி, டி.கல்லுப்பட்டி, பாப்பையாபுரம், சிலமலைப்பட்டி ஆகிய கிராமங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடும் வகையில் ரூ.45லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய பாலம்,அங்கன்வாடி மையம்,பயணியர் நிழற்குடை ஆகியவற்றின் திறப்பு விழா நேற்று வெகுசிறப்பாக நடைபெற்றது.

ஏராளமான பொதுமக்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை முறையாக கடைபிடித்து கலந்து கொண்ட இவ்விழாவிற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் அய்யப்பன்,டி.கல்லுப்பட்டி ஒன்றிய கழகச் செயலாளர் ராமசாமி, மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனரணி செயலாளர் ராமகிருஷ்ணன்,திருமங்கலம் ஒன்றிய கழகச் செயலாளர் வக்கீல்.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மதுரை புறநகர் மேற்கு மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவைச் செயலாளர் சாத்தங்குடி தமிழழகன்,மாவட்ட மீனவரணி செயலாளர் சரவணபாண்டியன்,டி.கல்லுப்பட்டி யூனியன் சேர்மன் சண்முகப்பிரியா பாவடியான்,துணை சேர்மன் முனியம்மாள், மாவட்ட கவுன்சிலர் செல்வமணி செல்லச்சாமி ஆகியோர் வரவேற்றனர்.

எழுச்சியுடன் நடைபெற்ற இவ்விழாக்களில் தமிழக வருவாய்,பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு தலைமையேற்று,சோலைப்பட்டியில் புதிய பாலம்,டி.கல்லுப்பட்டி பேரூராட்சி அரசு ஆரம்ப சுகாதார மையம் முன்பு பயணியர் நிழற்குடை,பாப்பையாபுரத்தில் அங்கன்வாடிமைய கட்டிடம் உள்ளிட்ட ரூ.45லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்றிருந்த பல்வேறு திட்டபணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.முன்னதாக அனைத்து கிராமங்களிலும் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் முககவசம்,ரஸ்க்பாக்கெட் போன்றவற்றினை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் வழங்கி கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிகழ்ச்சிகளில் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் பா.வெற்றிவேல், மாவட்ட கழக பொருளாளர் திருப்பதி,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வம்,மாவட்ட மகளிரணி செயலாளர் லெட்சுமி,மாவட்ட இளைஞரணி செயலாளர் கபிகாசிமாயன்,மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் எஸ்.பி.எஸ்.ராஜா, மாவட்ட ஐ.டி.விங் செயலாளர் சிங்கராஜபாண்டியன், டி.கல்லுப்பட்டி யூனியன் முன்னாள் துணை சேர்மன் டாக்டர்.பாவடியான்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாமிநாதன், பேரூர் கழகச் செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், நெடுமாறன், கட்சி நிர்வாகிகள் அம்மாபட்டி சுகுமார்,மாணிக்கம்,ஜெய.சி. செல்வகுமரன், பொன்னமங்கலம் ஜெயமணி,காலேஜ் விவேக், ஜி.பாண்டி, மாசாணம், பாஸ்கரன்,சம்பத், ஜெயலட்சுமி, சரிகாபானு, மீனாலட்சுமி, சாந்தி, பிச்சைகனி, கல்யாணி, பி.ஆர்.சி.அழகர்சாமி மற்றும் டி.கல்லுப்பட்டி யூனியன்,பேரூராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து