முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நான் அதிபரானால் அமெரிக்க மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்: ஜோபிடன்

சனிக்கிழமை, 24 அக்டோபர் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : நான் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் கொரோனாவை கட்டுப்படுத்த கவனம் செலுத்துவேன் என ஜோ பிடன் தெரிவித்தார்.

உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் இன்னும் குறையாத நிலையில், பல நாடுகள் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. முன்னணி நிறுவனங்கள் கண்டுபிடித்துள்ள தடுப்பூசி மருந்துகள் இன்னும் சோதனைக் கட்டத்தில் தான் இருக்கின்றன. 

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து எப்போது கண்டுபிடிக்கப்படும்?, எப்போது பயன்பாட்டிற்கு வரும்?, அதன் விலை எவ்வளவாக இருக்கும்? என்று இதுவரை யாராலும் அறுதியிட்டு சொல்ல முடியவில்லை.   

இந்நிலையில் அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் தனது பிரச்சாரத்தின் போது பேசுகையில், தேர்தலில் வெற்றி பெற்று அதிபரானால் அமெரிக்க மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசிய ஜோ பிடன், குடியரசுக் கட்சி ஆட்சியில் அதிபராக இருப்பவர் வைரசை எதிர்த்து போராடுவதை கைவிட்டு விட்டார்.

மேலும் அவர் அமெரிக்காவை விட்டு வெளியேறுகிறார். நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் கொரோனாவை கட்டுப்படுத்த கவனம் செலுத்துவேன். 

கொரோனா தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கப்பட்டதும், மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும். மக்கள் இன்சூரன்ஸ் செய்திருந்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி, இலவசமாக தடுப்பூசி போடப்படும். செலவினங்களுடன் போராடும் மக்களுக்கு உதவி செய்வோம் என்றார். 

இதேபோல் கொரோனா தடுப்பூசி வரும் வாரங்களில் தயாராக இருக்கும் என்றும், அதை மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்றும் அதிபர் டிரம்பும் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து