முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பன்னாட்டு கச்சா எண்ணெய் நிறுவன தலைமை நிர்வாகிகளுடன் நாளை பிரதமர் மோடி கலந்துரையாடல்

சனிக்கிழமை, 24 அக்டோபர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : பன்னாட்டு கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை அக். 26-ம் தேதி கலந்துரையாடுகிறார்.

நிதி ஆயோக் மற்றும் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சகம் ஏற்பாடு செய்திருக்கும் வருடாந்திர நிகழ்ச்சி அன்றைய தினம் இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு நடைபெறும் போது, பிரதமரின் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.  கச்சா எண்ணெய் பயன்படுத்தும் 3-வது பெரிய நாடாகவும், எல்.என்.ஜி. இறக்குமதி செய்யும் 4-வது பெரிய நாடாகவும் இந்தியா இருப்பதால், கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது.

சாதாரண நுகர்வோர் என்ற நிலையில் இருந்து, கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு மதிப்புச் சங்கிலியில் இந்தியா தீவிர பங்கெடுப்பு எடுத்துக் கொள்ள வேண்டிய தேவை இருப்பதைக் கருத்தில் கொண்டு உலக அளவிலான கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுடன்  பிரதமர் கலந்துரையாடல் செய்யும் முதலாவது நிகழ்ச்சிக்கு 2016-ல் நிதி ஆயோக் அமைப்பு ஏற்பாடு செய்தது. 

இத் துறையில் உள்ள பிரச்சினைகள் மற்றும் வாய்ப்புகள் குறித்து பிரதமருடன் கலந்துரையாடல் செய்வதற்கு அடுத்தடுத்த ஆண்டுகளில், இத் துறையில் முக்கிய பங்கு வகிக்கும் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள், முக்கிய பங்காளர்கள் 45- 50 பேர் பங்கேற்கிறார்கள். இந்த வகையில் இதன் வளர்ச்சியை அறிந்து கொள்ள முடிகிறது.

கலந்துரையாடல்களில் இடம் பெறும் விஷயங்களின் முக்கியத்துவம், தரப்படும் ஆலோசனைகளின் பயனுள்ள தன்மை, இந்த செயல்பாடுகளில் ஆர்வம் காட்டும் தன்மை ஆகியவற்றின் மூலம், தலைமைச் செயல் அதிகாரிகளின் கூட்டம் எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது என்பதை அறியலாம்.   நிதி ஆயோக் மற்றும் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சகம் சார்பில் இப்போது 5-வது நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 45 தலைமை செயல் அதிகாரிகள் இதில் பங்கேற்கிறார்கள்.  சிறந்த நடைமுறைகளைப் புரிந்து கொள்வதற்கு, சீர்திருத்தங்கள் பற்றி கலந்தாடல் செய்வதற்கு, இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு மதிப்புச் சங்கிலி அமைப்பில் முதலீடுகளை விரைவுபடுத்துவதற்கான உத்திகளை தெரிவிப்பது ஆகியற்றுக்கு உலக அளவிலான ஒரு தளமாக இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது.

அறிவார்ந்தவர்களின் கலந்துரையாடலாக மட்டும் இல்லாமல், அமல்படுத்தக் கூடிய யோசனைகளை பெறுவதற்கான மிக முக்கியமான கூட்டமாக இந்த நிகழ்ச்சி மாறி வருகிறது. உலக அளவில் எரிசக்தி பயன்பாட்டில் 3-வது பெரிய நாடாக இருக்கும் இந்தியாவின் எழுச்சி அதிகரித்து வரும் நிலையில், இந்தக் கூட்டத்தின் முக்கியத்துவமும் அதிகரித்து வருகிறது.

எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் அதிகரித்து வரும் தேவைகளை சமாளிக்க 2030 வாக்கில் 300 பில்லியன் டாலருக்கும் மேல் முதலீடுகள் வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.   

பெட்ரோலியம் மற்றும் எரிவாயு, ஸ்டீல் துறைகளின் அமைச்சர் தர்மேந்திர பிரதான் துவக்க உரையாற்றுகிறார். அதைத் தொடர்ந்து எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறை செயல்பாடுகள் குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்படும்.

இந்தியாவில் எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையின் லட்சியம் மற்றும் அதில் உள்ள வாய்ப்புகள் பற்றி அதில் விவரிக்கப்படும்.  அதன் பிறகு உலக அளவிலான தலைமை செயல் அதிகாரிகளுடன் கலந்தாடல் அமர்வுகள் நடைபெறும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து