பீகார் மாநிலத்தில் முதல் கட்ட தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது: வாக்குப்பதிவு நாளை துவக்கம்

திங்கட்கிழமை, 26 அக்டோபர் 2020      இந்தியா
Bihar 2020 10 26

Source: provided

பாட்னா : பீகார் மாநிலத்தில் முதல் கட்டமாக 71 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நாளை 28-ம் தேதி புதன்கிழமை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.முதல்கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் ஓய்ந்தது. 

பீகாரில் 243 பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 10-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. முதல் கட்டமாக 71 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நாளை 28-ம் தேதி புதன்கிழமை  வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 

இத்தொகுதிகளுக்கான பிரசாரம் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதனால், தலைவர்கள் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.  பீகார் முதல் கட்ட தேர்தலில் 1064-வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 35 சதவிகிதம் பேர் இளைஞர்கள் ஆவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து