இந்திய அணி தேர்வு கனவு போன்று உள்ளது : வருண் சக்ரவர்த்தி

செவ்வாய்க்கிழமை, 27 அக்டோபர் 2020      விளையாட்டு
Varunkanti 2020 10 27

Source: provided

துபாய் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சென்று மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாட இருக்கிறது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. 

டி20 அணியில் தமிழகத்தைச் சேர்ந்த வருண்காந்தி இடம் பிடித்துள்ளார். கொல்கத்தா அணியில் தனது மாயாஜால பந்து வீச்சால் அசத்தி வரும் நிலையில் இந்திய அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். 

இதுகுறித்து வருண் சக்ரவர்த்தில் கூறுகையில் ‘‘பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் விளையாடிய பிறகு இந்திய அணியில் இடம் கிடைத்ததை தெரிந்து கொண்டேன். நான் திரும்ப திரும்ப பயன்படுத்தும் வார்த்தை, கனவு போன்று உள்ளது என்பதுதான். 

என்னுடைய அடிப்படை இலக்கே அணியில் தொடர்ந்த இடம் பிடித்து, சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு பங்களிப்பை கொடுக்க வேண்டும் என்பதுதான்.

இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. நான் சமூக வலைத்தளங்களில் அதிகமாக இருந்தது இல்லை. என்மீது நம்பிக்கை வைத்து தேர்வு செய்ததற்காக தேர்வாளர்களுக்கு நன்றி கூறுகிறேன். இதைப்பற்றி சொல்வதற்கு வார்த்த இல்லை’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து