முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புற்றுநோயால் அவதிப்படும் தவசிக்கு ரூ.1 லட்சம் கொடுத்து உதவிய சிம்பு: ரஜினி நலம் மட்டும் விசாரித்தார்

புதன்கிழமை, 18 நவம்பர் 2020      சினிமா
Image Unavailable

Source: provided

சென்னை : ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘களவாணி’, ‘சுந்தரபாண்டியன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் தவசி. புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சில தினங்களுக்கு முன்னர் தனது சிகிச்சைக்கு திரைத்துறையினரோ, அரசோ உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, திருப்பரங்குன்றம் தி.மு.க. எம்.எல்.ஏ டாக்டர் சரவணன் அவருக்கு இலவச சிகிச்சை அளித்து உதவி செய்தார். இதனையடுத்து அவருக்கு நடிகர் விஜய்சேதுபதி 1 லட்சம் ரூபாயும், சூரி மற்றும் சிவகார்த்திகேயன் தலா 25,000 ரூபாயும், சவுந்தரராஜா 10,000 ரூபாயும் வழங்கினர். 

செல்போன் மூலம் தவசியை தொடர்பு கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், அவரிடம் நலம் விசாரித்தார். மேலும் அவருக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறை குறித்தும் கேட்டறிந்தார். 

இந்நிலையில் நடிகர் சிம்பு தவசிக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து