முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியா மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் - 10 பேர் பலி

வியாழக்கிழமை, 19 நவம்பர் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

டமாஸ்கஸ் : சிரியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. மேலும் இரு நாட்டு எல்லைப்பகுதியில் ஈரான் நாட்டின் ஆதரவு பெற்ற சிரியா கிளர்ச்சியாளர்கள்கள் மற்றும் ஈரான் புரட்சிப்படை பிரிவினர் பலர் பதுங்கியுள்ளனர். 

இவர்கள் சிரியாவில் இருந்தவாறு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவர்களை அழிக்க இஸ்ரேல் ராணுவம் சிரியாவில் அவ்வப்போது விமானப்படைகள் தாக்குதல் நடத்துவதுண்டு. 

இதற்கிடையில் இஸ்ரேலின் கோலன் பகுதியில் ராணுவ நிலைக்கு அருகே வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இது இஸ்ரேல் ராணுவத்தை தாக்க திட்டமிட்டு வைக்கப்பட்ட இந்த வெடிகுண்டுகள் சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களால் வைக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து எல்லையோரம் அமைந்துள்ள சிரியாவின் ராணுவ நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் அதிரடி வான்வெளி தாக்குதல் நடத்தியது. 

இந்த தாக்குதலில் 3 சிரியா ராணுவ வீரர்கள், ஈரான் புரட்சிப்படையினர், ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் என மொத்தம் 10 பேர் உயிரிழந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து