முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தைவான் : பயிற்சியில் ஈடுபட்ட அதிநவீன போர் விமானம் மாயம்

வியாழக்கிழமை, 19 நவம்பர் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

தாய்பே : தைவானுக்கும், சீனாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்து சுதந்திரம் பெற்ற போதும் தைவானை தனது நாட்டின் அங்கமாகவே சீனா கருதி வருகிறது. 

மேலும் தைவானை அச்சுறுத்தும் வகையில் அந்நாட்டின் எல்லைக்குள் அத்துமீறி சீனா தனது போர் விமானங்களை பறக்கச்செய்வதும் தினசரி நிகழ்வாகவே உள்ளது. 

ஆனால் அமெரிக்காவின் ஆதரவு பெற்ற தைவான் போர் விமானங்கள் உள்ளிட்ட ஆயுதங்களை அந்நாட்டிடம் இருந்து கொள்முதல் செய்து வருகிறது. மேலும் தனது ராணுவ பலத்தை அதிகரிக்கும் நடவடிக்கையிலும் தைவான் ஈடுபட்டு வருகிறது. 

குறிப்பாக அமெரிக்காவின் அதிநவீன போர் விமானங்களில் ஒன்றான எப் 16 ரக போர்விமானங்கள் தைவானிடம் 150-க்கும் அதிகமான அளவில் உள்ளது. சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதில் தைவானுக்கு எப் 16 ரக போர் விமானங்கள் பெரும் உதவி செய்கின்றன. 

இந்நிலையில் அந்நாட்டின் கிழக்குப்பகுதியில் உள்ள குவலியன் விமானப்படை தளத்தில் இருந்த எப் 16 ரக போர் விமானங்கள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன. 

போர் விமானங்கள் வானில் பறந்து குறிப்பிட்ட பகுதிக்கு சென்று பின்னர் மீண்டும் தளத்திற்கு திரும்பும் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன. 

அப்போது, 44 வயதுடைய விமானியான கர்னல் ஜியாங் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த எப் 16 போர் விமானம் ரேடாரின் பார்வையில் இருந்து மறைந்தது. மேலும் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பையும் இழந்தது. 

இதையடுத்து மாயமான எப் 16 போர் விமானத்தை தேடும்பணியை தைவான் விமானப்படையினர் துரிதப்படுத்தியுள்ளனர். போர் விமானம் கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து தென்சீன கடலில் விழுந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து