முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியா - இந்தியா முதல் ஒரு நாள் போட்டி: இந்திய நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மைதானத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்

வெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சிட்னி :  ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. முதலில், ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது. 

இதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி துறைமுக நகரான சிட்னியில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி இந்திய அணி வெற்றி பெற 375 ரன்கள் இலக்காக நிர்ணயித்து உள்ளது. 

போட்டியின் போது அங்கு நிலக்கரி சுரங்கம் நடத்தும் அதானி நிறுவனத்திற்கு எதிராக 2 பேர் மைதானத்திற்குள் நுழைந்து பதாகைகளை காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். 

ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரின் பதாகையில் அதானி குழுமத்திற்கு எதிராக "இல்லை $ 1 பில்லியன் அதானி கடன்" என்று எழுதப்பட்டு இருந்தது 

எதிர்ப்பாளர்களின் டி-ஷர்ட்டின் முன்புறம் “ஸ்டாப்அதானி” எழுதப்பட்டு இருந்தது. பின்புறம் “ஸ்டாப் நிலக்கரி” என்று இருந்ததது. 

இந்திய வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி ஆஸ்திரேலிய இன்னிங்ஸின் ஆறாவது ஓவரை வீச தயாராக இருந்த போது போராட்டக்காரர்களில் ஒருவர் மைதானத்திற்குள் ஊடுருவி பதாகையை ஏந்தியபடி ஆடுகளத்திற்கு அருகில் ஓடினார். 

இரு போராட்டக்காரர்களையும் பாதுகப்பு வீரர்கள் வெளியே அழைத்துச் சென்றனர். ஆச்சரியப்படும் விதமாக, பாதுக்காப்பு வீரர்கள் வர நேரம் அதிகம் ஆனது இது கிரிக்கெட் போட்டி தொடருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேள்விக்குறிகளை எழுப்பி உள்ளது. 

இது குறித்து ஆடம் கில்கிறிஸ்ட் கூறுகையில், "நாங்கள் இரண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் மைதானத்திற்குள் நுழைந்தது குறித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். “பாதுகாப்பு வீரர்கள் வந்து அவர்களை அகற்றும் வரை நாங்கள் காத்திருந்தோம். அந்த நேரத்தில் பாதுகாப்பு வீரர்கள் எந்த அவசரத்தையும் நாங்கள் காட்டவில்லை என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து