எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு மட்டும் 14-ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட கலெக்டர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நாளை (14-ந் தேதி) மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி, வியாழக்கிழமை முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன. நாளை (ஜூலை 14ம் தேதி) அதிகாலை 5.25 மணிக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க, கோவிலில் கம்பீரமான 125 அடி உயரம் கொண்ட ஏழு நிலையான ராஜகோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
இந்நிலையில், மதுரை மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. அன்றைய தினம் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு உட்பட்ட பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. எனினும் 14-ந் தேதி அன்று பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் ஏதேனும் அறிவிக்கப்பட்டிருப்பின் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கும் இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்கு பதிலாக வருகிற 19-ந்தேதி (சனிக்கிழமை) மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு உட்பட்ட பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு மட்டும் வேலை தினமாக அறிவிக்கப்படுகிறது. 14-ந் தேதி அன்று மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு உட்பட்ட சார்நிலை கருவூலம் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


