Idhayam Matrimony

ராணுவம் குறித்த அவதூறு பேச்சு: ராகுலுக்கு ஜாமின் வழங்கியது கோர்ட்

செவ்வாய்க்கிழமை, 15 ஜூலை 2025      இந்தியா
Rahul 2024-09-09

Source: provided

லக்னோ : ராணுவம் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு லக்னோ கோர்ட் ஜாமின் வழங்கியது.

 கடந்த 2022ம் ஆண்டு டிச., 16 ம் தேதி, இந்தியா - சீனா இடையே மோதல் நிலவி வந்த காலகட்டத்தில், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் சூழ்நிலையை மத்திய அரசு முறையாக கையாளவில்லை என லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

அதில், இந்திய ஆயுதப்படையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் ராகுல் கருத்து தெரிவித்ததாக எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற உதய் சங்கர் ஸ்ரீ வஸ்தவா என்பவர் லக்னோ மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், ராகுலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம்,அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு இருந்தது. இதனை எதிர்த்து அவர் அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், சம்மனை ரத்து செய்ய ஐகோர்ட மறுத்துவிட்டது.

இந்நிலையில், லக்னோ மாவட்ட நீதிமன்றத்தில், நேற்று ராகுல் நேரில் ஆஜரானார். அப்போது, ரூ.20 ஆயிரம் பிணைத்தொகை மற்றும் அதே தொகைக்கு இருவர் இருவரின் பிணையில் ராகுலுக்கு ஜாமின் வழங்கி மாவட்ட நீதிமன்ற கூடுதல் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் அலோக் வர்மா ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து