முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மயிலாடுதுறையில் முதல்வர் ரோடு ஷோ: 2 கி.மீ. நடந்து சென்று மக்களை சந்தித்தார்

செவ்வாய்க்கிழமை, 15 ஜூலை 2025      தமிழகம்
CM-1-2025-07-15

மயிலாடுதுறை, தொடர்ந்து மயிலாடுதுறையில்  முதல்வர் மு.க.ஸ்டாலின் 'ரோடு ஷோ'நடத்தினார். 

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு அங்கிருந்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சென்றார். மயிலாடுதுறை மாவட்ட எல்லையான கொள்ளிடத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கொள்ளிடம் பாலம் அருகே சோதியக்குடி புறவழிச்சாலையில் தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்பு அங்கிருந்து புறப்பட்டு திருவெண்காடு சென்று அங்கு மதியம் தங்கினார். தொடர்ந்து மாலை 5 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு செம்பதனிருப்பு சென்று அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறையில் பூம்புகார் சாலை முதல் கச்சேரி சாலையில் உள்ள தி.மு.க. அலுவலகமான அண்ணா பகுத்தறிவு மன்றம் வரை முதல்வர் மு.க.ஸ்டாலின் 'ரோடு ஷோ'நடத்தினார். முதல்-அமைச்சரை பார்ப்பதற்காக சாலையின் இருபுறமும் தி.மு.க. கொடிகள், தி.மு.க. கொடி நிறத்திலான பலூன்கள், முதல்வர் படங்கள் கொண்ட பதாகைகளை பிடித்தபடி பொதுமக்கள் மற்றும் கட்சியினர் நின்று இருந்தனர். வழிநெடுகிலும் முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதல்வர் மு.க. ஸ்டாலின் ரோடு ஷோ மூலம் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். முதல்-அமைச்சரின் சுற்றுப்பயணத்தையொட்டி மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து