முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு வாரம் பரோல்: சுப்ரீம் கோர்ட்

வெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : பேரறிவாளனுக்குக் கூடுதலாக ஒரு வாரம் பரோலை நீட்டித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பேரறிவாளன் தனது தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி தொடர்ந்த வழக்கு கடந்த திங்கட்கிழமை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது மருத்துவ சிகிச்சைக்காக பேரறிவாளனுக்கு ஒரு வாரத்திற்கு பரோல் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

பின்னர், பிரதான கோரிக்கை தொடர்பான வழக்கை இறுதி விசாரணைக்காக ஜனவரி 19-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இதனிடையே பேரறிவாளன் தரப்பில், மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள மேலும் 90 நாட்கள் பரோலை நீட்டிக்க வேண்டும் எனக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு இடைக்கால மனு, தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனு நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.  அப்போது தமிழக அரசுத் தரப்பில், இரண்டு வருட காலத்துக்கு 30 நாட்கள் பரோல் வழங்க அனுமதி உள்ளது. ஆனால், பேரறிவாளனுக்கு நவம்பர் 9 முதல் வழங்கப்பட்டுள்ள பரோலையும் சேர்த்து அவருக்கு 51 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பேரறிவாளன் 25 கி.மீ. தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் செல்லாமல் 200 கி.மீ. தூரத்தில் சென்னையில் உள்ள மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. 

அப்போது பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர், பேரறிவாளனுக்கு சிறுநீரகத்தில் 25 சதவீத அடைப்பு உள்ளது. அதற்கு சிகிச்சை பெற 4 வாரமாவது பரோல் தேவைப்படுகிறது. எனவே, குறைந்தது 4 வாரத்துக்காவது பரோலை நீட்டிக்க வேண்டும் எனக் கோரினார். 

அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், பேரறிவாளனுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள பரலோடு கூடுதலாக ஒரு வாரத்துக்குப் பரோலை நீட்டித்து வழங்கி உத்தரவிட்டனர் மேலும், பரோலை நீட்டிப்பது இதுதான் கடைசி முறை என்றும், இதற்கு மேல் நீட்டிக்க முடியாது என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். 

அதேபோல, அருகில் உள்ள சி.எம்.சி மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் பேரறிவாளனுக்கு அறிவுறுத்தினர். இந்த உத்தரவால் பேரறிவாளனின் பரோல் டிசம்பர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து