சிட்னி டெஸ்ட்: இந்திய அணி 244 ரன்களில் ஆல் அவுட்

சனிக்கிழமை, 9 ஜனவரி 2021      விளையாட்டு
Indian-team 2021 01 09

Source: provided

சிட்னி : இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 338 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் புகோல்ஸ்கி 62 ரன், லபுஸ்சேன் 91 ரன், ஸ்மித் 131 ரன் எடுத்தனர். 

அதன்பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நிதானமாக ஆடியது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் எடுத்திருந்தது. ரஹானே 5 ரன்களிலும் புஜாரா 9 ரன்களிலும் களத்தில் இருந்தனர். 

இந்நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று காலை தொடங்கியது. நிதானமாக ஆடிய ரகானே 22 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹனுமா விஹாரி 4 ரன்னில் ரன் அவுட்டானார். பொறுமையாக ஆடிய புஜாரா, சுப்மன் கில் இருவரும் 50 ரன்கள் எடுத்தனர். ரிஷப் பன்ட் 36 ரன்களில் விக்கெட்டை இழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இந்தியா அணி 244 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஜடேஜா 28 ரன்களுடன் களத்தில் இருந்தார். 

ஆஸ்திரேலியா தரப்பில் பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியின் ரன் குவிப்பை வெகுவாக கட்டுப்படுத்தினார். ஹாசில்வுட் 2 விக்கெட், ஸ்டார்க் ஒரு விக்கெட் எடுத்தனர். இதனையடுத்து 94 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி 2-ம் இன்னிங்சை தொடங்கியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து