முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கான பிரதான சடங்குகள் தொடங்கின

திங்கட்கிழமை, 11 ஜனவரி 2021      ஆன்மிகம்
Image Unavailable

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்காக கடந்தமாதம் (டிசம்பர்) 30-ந்தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. மறுநாள்(31-ந்தேதி) முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். 

கொரோனா கட்டுப்பாடு களின்படி ஆன்லைனில் முன் பதிவு செய்த பக்தர்களே சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மகரவிளக்கு பூஜை வருகிற 14-ந்தேதி நடக்கிறது. அன்றையதினம் மாலை மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது. மகரவிளக்கு பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டு உள்ளன. 

மகரவிளக்கு பூஜைக்கான பிரதான சடங்குகள் நேற்று தொடங்கியது. பிரசித்தி பெற்ற அம்பலப்புழா, ஆலங் காடு சங்கங்களின் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. 

அதேபோல் மகரவிளக்கு பூஜை தினமான 14-ந்தேதி மாலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவா பரணங்கள் பந்தளம் அரண் மனையில் இருந்து நேற்று புறப்பட்டது. திருவாபரண பெட்டி ஊர்வலம் 14-ந்தேதி மாலை 5:30 மணிக்கு சரங் குத்திக்கு வந்து சேரும். 

அங்கு திருவாபரண பெட்டியை தேவசம்போர்டு மந்திரி, தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வரவேற் கிறார்கள். பின்பு அவை, ஐயப்ப சுவாமி கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு தந்திரி மற்றும் மேல்சாந்தியிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதனை பெற்றுக்கொள்ளும் அவர்கள், ஐயப்பனுக்கு திருவாபரணங்களை அணி விக்கின்றனர். அதன்பிறகு ஐயப்பனுக்கு தீபாராதனை நடக்கிறது. 

தீபாராதனை முடிந்ததும் பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவில் ஐயப்பன் காட்சி தருவார். அய்யப் பனுக்கு வருகிற 18-ந்தேதி வரை நெய் அபிஷேகம் நடைபெறும். 19-ந்தேதியே பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். மகரவிளக்கு பூஜை முடிந்து 20-ந்தேதி காலை 6:30மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து