2-வது தடுப்பூசி போட்டு 14 நாட்களுக்கு பின்னர்தான் செயல்திறன் தெரியும்: மத்திய அரசு தகவல்

புதன்கிழமை, 13 ஜனவரி 2021      இந்தியா
Corona-vaccine 2020 12 25

மத்திய சுகாதார துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், டெல்லியில் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், கொரோனாவை தடுக்க 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். 

ஒரு டோஸ் தடுப்பூசி போட்டு 28 நாட்களுக்கு பின்னர் 2-வது டோஸ் செலுத்திக்கொள்ள வேண்டும். 2-வது டோஸ் தடுப்பூசி போட்டு 14 நாட்களுக்கு பின்னர் தான் தடுப்பூசியின் செயல்திறனை பார்க்க முடியும். எனவே மக்கள் கொரோனா தடுப்பு நடைமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் நிருபர்களிடம் கூறுகையில், இந்தியாவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள 2 தடுப்பூசிகளும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு செலுத்தி சோதிக்கப்பட்டவை ஆகும். அவை பாதுகாப்பானவை. குறிப்பிடத்தக்க எந்தவொரு இடர்ப்பாடும் இல்லாதவை என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து