Idhayam Matrimony

சட்டசபை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு: தலைமை தேர்தல் ஆணைய குழு அடுத்த மாதம் தமிழகம் வருகை

புதன்கிழமை, 28 ஜனவரி 2026      தமிழகம்
Election-Commision 2023-04-20

சென்னை, சட்டசபை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணைய குழு அடுத்த மாதம் தமிழகம் வருகிறது.

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. பொதுவாக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், அந்தந்த மாநிலங்களுக்குச் சென்று தலைமை தேர்தல் கமிஷனர் தலைமையிலான குழு 2 நாட்கள் தங்கி இருந்து தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்வது வழக்கம். பொதுவாக வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டதும் இந்தக் குழு வரும் பிப்ரவரி மாதம் 17-ம் தேதியன்று தமிழகத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அதையொட்டிய தேதியில் இந்தக் குழு சென்னைக்கு வருகை தரும்.

இந்த வருகையின்போது, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், வருமான வரித்துறை, வங்கிகள், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்ட மத்திய அரசுத் துறைகளின் அதிகாரிகளை அழைத்து தலைமை தேர்தல் கமிஷனர் ஆலோசனை நடத்துவார். அதற்கு முன்னதாக தேர்தல் கமிஷனின் துணை கமிஷனர்கள் தமிழகம் வந்து ஆய்வு மேற்கொள்வார்கள்.

சிறப்பு தீவிர திருத்தப் பணியை முன்னிட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசம் வரும் 30-ந் தேதியுடன் (நாளை ) முடிகிறது. ஏற்கனவே கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு இருப்பதால் மேலும் கால அவகாசம் அளிப்பதற்கு வாய்ப்பில்லை என்று தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து