Idhayam Matrimony

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: ராகுல் காந்தி - கனிமொழி சந்திப்பு

புதன்கிழமை, 28 ஜனவரி 2026      இந்தியா
Kanimozhi 2023-10-13

புதுடெல்லி, டெல்லியில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தியுடன் தி.மு.க. எம்.பி. கனிமொழி சந்தித்து பேசினாார்.

தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் (25 தொகுதிகளில் போட்டியிட்டது), விடுதலை சிறுத்தைகள் கட்சி (6), ம.தி.மு.க. (6), இந்திய கம்யூனிஸ்டு கட்சி (6), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி (6), கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (3), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (3), மனிதநேய மக்கள் கட்சி (2), தமிழக வாழ்வுரிமைக்கட்சி (1) உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன.

கூட்டணிக்கு தலைமை வகித்த தி.மு.க. 177 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில், ம.தி.மு.க., கொ.ம.க., ம.ம.க., தமிழக வாழ்வுரிமை கட்சி போன்றவை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதும் அடங்கும். இறுதி வடிவம் பெற்ற கூட்டணி கடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் இந்த முறையும் இடம் பெற்றுள்ளது. கூடுதலாக, நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யமும் கைகோர்த்துள்ளது.

இந்த சூழலில், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் எல்லாம், இந்த முறை கூடுதல் தொகுதிகளை கேட்டுப்பெறுவோம் என்று கூறிவருகின்றன. ஆனால், வெளிப்படையாக இன்னும் தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை தொடங்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று (புதன்கிழமை) டெல்லி செல்லும் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசியுள்ளார்.  கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடுகள் குறித்தும் இறுதி பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. தி.மு.க.- காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏதும் இல்லாமல் இருந்த நிலையில் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி எம்.பி. கனிமொழி, ராகுலை சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து