Idhayam Matrimony

ஏ.டி.ஜி.பி. ஜெயராம் மீதான சஸ்பெண்ட் உத்தரவு ரத்து

புதன்கிழமை, 28 ஜனவரி 2026      தமிழகம்
TN 2023-04-06

சென்னை, ஏ.டி.ஜி.பி. ஜெயராம் மீதான சஸ்பென்ட் உத்தரவை தமிழக உள்துறை ரத்து செய்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கத்தில் காதல் திருமணம் செய்த இளைஞரின் சகோதரன் கூலிப்படை மூலம் கடத்தப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜெகன் மூர்த்தி, ஏ.டி.ஜி.பி. ஜெயராமன் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக கோர்ட்டு உத்தரவின்பேரில் ஏ.டி.ஜி.பி. ஜெயராமன் கைது செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து ஏ.டி.ஜி.பி. ஜெயராமனை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதன்படி ஆள் கடத்தலுக்கு கார் கொடுத்து உதவிய குற்றச்சாட்டில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஏ.டி.ஜி.பி. ஜெயராமன் சஸ்பென்ட் செய்யப்பட்டார். இதனையடுத்து துறை ரீதியிலான விசாரணை நடந்தது வந்தது. இந்த நிலையில் தற்போது அவரது சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து தமிழ்நாடு உள்துறை உத்தரவிட்டுள்ளது. பணியிடம் ஒதுக்கப்படாமல் உள்ள நிலையில் ஜெயராமுக்கு இந்த வாரம் பணியிடம் ஒதுக்கி உத்தரவு பிறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வருகிற மே மாதத்துடன் ஜெயராம் ஓய்வுபெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து