முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதால் பிரிஸ்பேன் டெஸ்டில் ஆஸி. தொடக்க வீரர் புகோவ்ஸ்கி

புதன்கிழமை, 13 ஜனவரி 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சிட்னி  தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதால் பிரிஸ்பேன் டெஸ்டில் ஆஸி. தொடக்க வீரர் புகோவ்ஸ்கி விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது. ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடரில், முதல் டெஸ்டை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா.

மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 11 என சமன் செய்தது. 3-வது டெஸ்ட் சிட்னியில் நடைபெற்றது.  இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. 407 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, கடைசி நாளில் ஆஸி. பந்துவீச்சை சமாளித்து டெஸ்டை டிரா செய்து அனைவருடைய பாராட்டையும் பெற்றுள்ளது. இதனால் டெஸ்ட் தொடர் 11 என சமனில் உள்ளது. பிரிஸ்பேனில் நடைபெறும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் வெள்ளியன்று தொடங்குகிறது.

சிட்னியில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமான ஆஸி. தொடக்க வீரர் புகோவ்ஸ்கி, ஃபீல்டிங் செய்தபோது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதற்காக அவர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். ஆஸி. அணி பயிற்சி செய்தபோது புகோவ்ஸ்கி, பேட்டிங் பயிற்சியில் ஈடுபடவில்லை. முழு உடற்தகுதியில் இல்லாததால் பிரிஸ்பேன் டெஸ்டில் புகோவ்ஸ்கி விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது.

புகோவ்ஸ்கியால் பிரிஸ்பேன் டெஸ்டில் விளையாட முடியுமா என்பது இன்றிரவு தெரிந்துவிடும் என ஆஸி. பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளார். புகோவ்ஸ்கியால் விளையாட முடியாமல் போனால் மார்கஸ் ஹாரிஸ் தொடக்க வீரராகக் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து