உபி, உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டி: மாயாவதி அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 15 ஜனவரி 2021      இந்தியா
Mayawati 2020 11 02

Source: provided

கொல்கத்தா : அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் சட்டபேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும் என மாயாவதி அறிவித்துள்ளார். 

உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இதுகுறித்து வெள்ளிக்கிழமை பேசிய பகுஜன்சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கூட்டணியில் போட்டியிடப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு எந்தவொரு கூட்டணியிலும் இடம்பெற மாட்டேன் என மாயாவதி அறிவித்துள்ளார். 

அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் கட்சி தனித்துப் போட்டியிடும். சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் பகுஜன் சமாஜ் கட்சி கொரோனா தடுப்பூசியை அனைவருக்கும் இலவசமாக வழங்குவோம் என மாயாவதி மேலும் தெரிவித்தார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து