ராஜஸ்தானில் பேருந்து தீப்பற்றி எரிந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜனவரி 2021      இந்தியா
Modi-1 2020 12 04

Source: provided

ஜெய்பூர் : ராஜஸ்தானில் பேருந்து தீப்பற்றி எரிந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில் உள்ள மகேஷ்பூரில் சனிக்கிழமை (நேற்று முன்தினம்) இரவு 10.30 மணியளவில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து தீடீரென தீப்பிடித்து எரிந்தது. மின்சார வயர் மீது பேருந்து உரசியதால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.  இதில் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான்கு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 7 பேர் மேல் சிகிச்சைக்காக ஜோத்பூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ராஜஸ்தான் ஜலோரில் நடந்த பஸ் விபத்து காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவத்துக்கு பிரதமர்  நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், ராஜஸ்தான் ஜலோரில் ஏற்பட்ட பஸ் விபத்து செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.

இந்த விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து