முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பைடனின் பதவியேற்பை வரவேற்று கோலமிட்ட அமெரிக்கர்கள்

திங்கட்கிழமை, 18 ஜனவரி 2021      உலகம்
Image Unavailable

வரவேற்பின் அடையாளமாக வீடுகளின் வாசல்களில் இடப்படும் தமிழர்களின் பாரம்பரிய கலை வடிவமான கோலம் அமெரிக்காவின் ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் ஒரு அங்கமாக மாறி இருக்கிறது. 

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் நாளை (புதன்கிழமை) பதவி ஏற்கிறார்கள். 

இந்த வரலாற்று நிகழ்வைக் கொண்டாட ஆயிரக்கணக்கான கோலங்களை உருவாக்கும் ஆன்லைன் முயற்சியில் அமெரிக்கா முழுவதிலும் இருந்து 1,800-க்கும் மேற்பட்ட நபர்களும் இந்தியாவில் இருந்து பலரும் பங்கேற்றனர். 

புதிய நிர்வாகத்துக்கு நல்ல தொடக்கத்தின் அடையாளமாக நாடு முழுவதும் இருந்து வரும் கோலங்களை வெள்ளை மாளிகையின் முன் காட்சிப்படுத்த முதலில் திட்டமிடப்பட்டது. வாஷிங்டன் போலீசார் இதற்கு அனுமதியும் வழங்கினர். 

இருப்பினும் வாஷிங்டனில் எதிர்பாராத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டதால், இந்த அனுமதி ரத்து செய்யப்பட்டது. 

இதன் விளைவாக பைடன் மற்றும் ஹாரிஸை அனைவருக்குமான ஜனாதிபதி என்ற மனப்பான்மையுடன் வரவேற்கவும் அமெரிக்காவின் பல கலாசார பாரம்பரியத்தை வெளிப்படுத்தவும் கோலங்கள் போடப்பட்ட ஆயிரக்கணக்கான ஓடுகளின் படங்கள் ஒரு வீடியோவாக உருவாக்கப்பட்டது. 

உள்ளூர் பாதுகாப்பு நிறுவனங்களிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன் கோலங்கள் போடப்பட்ட ஓடுகளை காட்சிப்படுத்துவதற்கான இடமும் நாளும் தீர்மானிக்கப்படும் என்று ‘கோலம் 2021' ஏற்பாட்டு குழு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து