முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸ் செயற்குழுவில் மூத்த தலைவர்கள் கடும் மோதல்

சனிக்கிழமை, 23 ஜனவரி 2021      அரசியல்
Image Unavailable

காங்கிரஸ் செயற்குழு கூட்டம் சோனியா காந்தி தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டனர். அப்போது பாராளுமன்ற கூட்டத்தொடர், உள்கட்சி தேர்தல் மற்றும் கொரோனா ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டது. இது தொடர்பாக 3 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. 

முன்னதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பேசிய போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உள்கட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாக பேச்சு எழுந்த போது ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், இப்போது உள்கட்சி தேர்தல் நடத்த வேண்டாம். 5 மாநில தேர்தல் நடந்து முடிந்த பிறகு உள்கட்சி தேர்தலை நடத்தலாம்என்று தெரிவித்தார்.

இதற்கு அனந்தசர்மா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். உள்கட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்றார். இதையடுத்து அசோக் கெலாட்டும், அனந்த சர்மாவும் காரசாரமாக பேசினார்கள்.

அவர்கள் இருவரையும் காங்கிரஸ் தலைவர் சோனியா சமரசம் செய்தார். என்றாலும் மூத்த தலைவர்கள் மத்தியில் கடும் வாக்குவாதம் நீடித்தது. அனந்த சர்மாவுக்கு ஆதரவாக குலாம்நபி ஆசாத், முகுல் வாசினிக் ஆகியோர் குரல் கொடுத்தனர். அதேசமயத்தில் அசோக்கெலாட்டுக்கு ஆதரவாக அமரிந்தர்சிங், பூபேஸ் பாகல், ஏ.கே.அந்தோணி, அம்பிகா சோனி, ஹரீஸ் ராவத் ஆகியோர் குரல் கொடுத்தனர். இதனால் சிறிது நேரம் செயற்குழு ஆலோசனையில் கடுமையான கருத்து வேறுபாடுகள் எதிரொலித்தன.

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் உள்கட்சி தேர்தலை உடனடியாக நடத்துவது என்ற கருத்தை ஆதரித்தார். இந்த குழப்பம் சிறிது நேரம் நீடித்தது. அதன்பிறகு இதில் முடிவு எட்டப்படாமல் முடித்துக்கொள்ளப்பட்டது. அதன் பிறகே தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் அதிருப்தி தலைவர்கள் மீண்டும் புதிய தலைவரை தேர்வு செய்ய வலியுறுத்தியது மூத்த தலைவர்களின் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து