முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ. 37 ஆயிரத்துக்கும் கீழே குறைந்த ஒரு சவரன் தங்கம்

புதன்கிழமை, 27 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து 37 ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு விலை குறைந்தாலும், கடந்த வாரத்தில் ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது.

இந்நிலையில் சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.36,968-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.15 குறைந்து, ரூ.4,621 ஆக விற்கப்படுகிறது. 8 கிராம் தூய தங்கம் நேற்று முன்தினம் 40,160 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், நேற்று 120 ரூபாய் குறைந்து 40,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் நேற்று அதிரடியாகக் குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று முன் தினம் ரூ.71.30 ஆக இருந்தது. நேற்று ரூ.70.80 ஆகக் குறைந்து, ஒரு கிலோ வெள்ளி 70,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து