முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா தாக்கல் செய்தார்: பாராளுமன்றத்தில் காகிதமில்லா டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல்: தமிழகத்திற்கு சாலைகள் உட்பட பல்வேறு சிறப்பு அறிவிப்புகள்

திங்கட்கிழமை, 1 பெப்ரவரி 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : பாராளுமன்ற மக்களவையில் 2021-2022ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். வரும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களுக்கு சிறப்பு அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் பட்ஜெட்டில் வெளியிட்டு உள்ளார்.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த 29-ம் தேதி தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்ற வகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பாராளுமன்ற இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11 சதவீதம் அளவுக்கு இருக்கும் என எதிர்பார்ப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு நேற்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-2022ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்து உரையாற்றினார். இது அவர் தாக்கல் செய்த 3-வது பட்ஜெட் ஆகும்.  

முன்னதாக, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் நிதித்துறை குழுவினர் நேற்று காலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர். அவரிடம் பட்ஜெட் தாக்கல் தொடர்பாக எடுத்துரைத்தனர். அதன்பின்னர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் நிதித்துறை அதிகாரிகள் பாராளுமன்றத்திற்கு புறப்பட்டனர். முதலில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்தியாவில் முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டின் அங்கீகரிக்கப்பட்ட பிரதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, உடனே இணையத்தில் வெளியிடப்பட்டது.   

இந்த பட்ஜெட்டில் வரும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களுக்கு சிறப்பு அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் வெளியிட்டு உள்ளார். அசாம், மேற்கு வங்கம், கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கான சிறப்பு உள்கட்டமைப்பு திட்டங்களை  நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் அறிவித்தார். 

பட்ஜெட் உரையின் போது  தமிழகத்தில்  ரூ.1.03 லட்சம் கோடி முதலீட்டில் 3500 கி.மீ தூர தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை அறிவித்தார்.  மதுரை-கொல்லம் சாலை மற்றும் சித்தூர்-தாட்சூர் சாலை ஆகியவை இதில் அடங்கும். அடுத்த ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும். சென்னையில் ரூ. 63 ஆயிரம் கோடியில்  மெட்ரோ 2-வது கட்ட திட்டம் செயல்படுத்தப்படும். 

கொச்சி, சென்னை, விசாகப்பட்டினம், பரதீப் மற்றும் பெட்டுகாட் ஆகிய 5 முக்கிய மீன்பிடித் துறைமுகங்கள் பொருளாதார நடவடிக்கைகளுக்கான மையங்களாக உருவாக்கப்படும். கன்னியாகுமரி நடைபாதையின் 600 கி.மீ உள்பட ரூ .65,000 கோடி முதலீட்டில் கேரள மாநிலத்தில் 1100 கி.மீ தேசிய நெடுஞ்சாலை பணிகள் மேற்கொள்ளப்படும். மேற்கு வங்க மாநிலத்தில் ரூ .25,000 கோடி செலவில் கொல்கத்தா-சிலிகுரி சாலை மேம்படுத்துதல் உட்பட 6700 கி.மீ நெடுஞ்சாலை பணிகள் செயல்படுத்தப்படும் என்று தெரிவி்ததார். 

மேலும் அசாம் மாநிலத்தில் தற்போது ரூ .19000 கோடியில் தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடந்து வருவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அடுத்த மூன்று ஆண்டுகளில் சமா நிலத்தில் 1300 கி.மீ-க்கும் அதிகமான தேசிய நெடுஞ்சாலைகளை உள்ளடக்கிய ரூ .34,000 கோடி பணிகள்  மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து