எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
லக்னோ : உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு, பூட்டான் பிரதமர் தாஷோ ஷெரிங் டோப்கே நேற்று வருகை தந்தார். ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர், அயோத்தியில் உள்ள பிற முக்கிய ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்தார்.
முன்னதாக இந்திய விமானப் படையின் சிறப்பு விமானம் மூலம் காலை 9.30 மணியளவில் அயோத்தி விமான நிலையத்திற்கு டோப்கே வந்திறங்கினார். மாவட்ட நிர்வாகத்தால் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. உத்தர பிரதேச மந்திரி சூர்ய பிரதாப் ஷாஹி, அயோத்தி மேயர் கிரிஷ் பதி திரிபாதி, எம்.எல்.ஏ. வேத் பிரகாஷ் குப்தா மற்றும் அரசு அதிகாரிகள் அவரை வரவேற்றனர்.
விமான நிலையத்தில் இருந்து, கார் மூலம் அலகாபாத் மற்றும் லக்னோ-கோரக்பூர் நெடுஞ்சாலைகள் வழியாக ராமர் கோவிலை டோப்கே சென்றடைந்தார். அயோத்தியில் உள்ள ராமர் கோவில், அனுமன் கோவில் மற்றும் பிற முக்கிய கோவில்களில் டோப்கே தரிசனம் செய்தார். அவருக்கு சிறப்பு மதிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து மதியம் 1.30 மணியளவில் பூட்டான் பிரதமர் டோப்கே அயோத்தியில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


